வலுக்கும் மோதல்! எல்லை மீறும் கனடா - இந்தியா கடும் கண்டனம்

Dr. S. Jaishankar India Canada
By Shadhu Shanker Nov 07, 2024 10:44 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in கனடா
Report

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் (S. Jaishankar) செய்தியாளர் சந்திப்பை ஒளிபரப்பிய ஊடகத்தைக் கனடா அரசு தடை செய்துள்ளது.

இந்தியா கனடா (Canada) இடையே மிக மோசமான ஒரு உறவே நிலவி வரும் நிலையில், நிலைமை மேலும் மோசமாக்கும் வகையில் கனடா இவ்வாறு செய்துள்ளமை பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், இந்தியா இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

இந்தியா (India)  கனடா இடையே கடந்த சில காலமாகவே மிக மோசமான உறவு நிலவி வருகிறது. இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கரின் செய்தியாளர் சந்திப்பை ஒளிபரப்பிய ஊடகத்தைக் கனடா அரசு தடை செய்துள்ளது.

டிக்டொக் சமூக வலைதளம் தொடர்பில் கனடா அரசின் அதிரடி முடிவு

டிக்டொக் சமூக வலைதளம் தொடர்பில் கனடா அரசின் அதிரடி முடிவு

செய்தி நிறுவனத்திற்கு தடை

இந்த நடவடிக்கைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.

வலுக்கும் மோதல்! எல்லை மீறும் கனடா - இந்தியா கடும் கண்டனம் | Canada Blocks Jaishankar S Press Coverage

இந்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது அவுஸ்திரேலியா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

அங்கு அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்த அவர், விரிவான ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், 15வது வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு குறித்தும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங்கை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஜெய்சங்கரின் இந்த சந்திப்பு குறித்த தகவல்களை அவுஸ்திரேலியா செய்தி நிறுவனமொன்று வெளியிட்டு இருந்தது. மேலும், கான்பெராவில் ஜெய்சங்கர் நடத்திய செய்தியாளர் சந்திப்பும் ஒளிபரப்பப்பட்டது.

சுவிட்சர்லாந்து அரசின் அதிரடி அறிவிப்பு

சுவிட்சர்லாந்து அரசின் அதிரடி அறிவிப்பு

கனடா இடையேயான உறவு

அந்த செய்தியாளர் சந்திப்பில் தான் அவர் இந்தியா கனடா இடையேயான உறவு மோசடைவது குறித்து ஜெய்சங்கர் பேசியிருந்தார். மேலும், கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்தும் விளக்கியிருந்தார்.

வலுக்கும் மோதல்! எல்லை மீறும் கனடா - இந்தியா கடும் கண்டனம் | Canada Blocks Jaishankar S Press Coverage

இது குறித்த செய்திகளை அவுஸ்திரேலியா ஊடகமொன்று செய்தியாக வெளியிட்டு இருந்தது. இது நடந்து சில மணி நேரத்தில் அவுஸ்திரேலியா செய்தி நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்கள் கனடாவில் முடக்கப்பட்டது. இது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "புலம் பெயர்ந்தோரின் முக்கிய ஊடகமான அந்த ஊடகத்தின் சமூக வலைத்தளப் பக்கங்கள் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

கனடாவில் அந்த ஊடகத்தின் பக்கங்களை யாராலும் பார்க்க முடியவில்லை. நமது வெளியுறவுத் துறை அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு ஒளிபரப்பப்பட்டு சில மணி நேரத்தில் இது நடந்துள்ளது” என்றார்.

டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய தந்தை! இளம் பெண்ணின் சர்ச்சைக்குரிய காணொளி

டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய தந்தை! இளம் பெண்ணின் சர்ச்சைக்குரிய காணொளி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                         
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி