டிக்டொக் சமூக வலைதளம் தொடர்பில் கனடா அரசின் அதிரடி முடிவு
TikTok
Canada
Social Media
By Raghav
கனடாவில் உள்ள சீன சமூக வலைதளமான டிக்டொக் (TikTok)க்கு சொந்தமான அலுவலகங்களை மூட கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
மேலும் கனேடியர்கள் ஒன்லைனில் (Online)டிக்டொக் வலைதளத்தை அணுக தடை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், டிக்டொக் உடன் தொடர்புடைய நிறுவனங்களை மூடுவதற்கான அரசாங்கத்தின் முடிவால் பல உள்ளூர் வேலைகள் இழக்கப்படும் என்று Tik Tok இன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கனேடிய அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க டிக்டொக் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்