கிரீஸ் நாட்டில் தொழிலுக்கு சென்ற இலங்கைப் பெண்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!
Sri Lankan Peoples
Greece
By Harrish
வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் இருந்து கிரீஸ்(Greece) நாட்டில் தொழிலுக்கு சென்ற இலங்கைப் பெண்கள் குழுவொன்று தங்குமிட வசதிகள் இன்மையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நுகேகொட பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று அண்மையில் கிரீஸில் உள்ள ஸ்ட்ராபெரி பண்ணைகளில் பணிபுரிய 05 பெண்களை அனுப்பியுள்ளது.
பணியிடத்தில் அசௌகரியம்
இருப்பினும், பணியிடங்களுக்கு அவர்கள் அனுப்பப்பட்ட போதிலும், அவர்களுக்கான தங்குமிடம் மற்றும் பிற வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தின் காரணமாக அவர்கள் பணிபுரிந்த பண்ணைகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் ! 9 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்