துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் : வெளியான அறிவிப்பு
பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை ஒப்படைக்க வழங்கப்பட்ட கால அவகாசகத்தை நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு (Ministry Of Defence) தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை இலங்கை கடற்படையின் வெலிசறையில் (Welisara) அமைந்துள்ள அரச வணிக வெடிபொருள் களஞ்சியசாலையில் கையளிக்குமாறு அந்த அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தற்காப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மீள ஒப்படைப்பதற்கு நவம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் முடிவடையும் ஒரு மாத கால அவகாசகத்தை அமைச்சு வழங்கியிருந்தது.
பொதுமக்களின் தற்காப்பு
இந்த நிலையில், குறித்த கால அவகாசத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படும் எனவும், அவற்றை நவம்பர் மாதம் 07ஆம் திகதிக்கு முன்னர் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீளாய்வு செய்ததன் பின்னர், அவற்றை மீண்டும் வழங்க எதிர்பார்த்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |