போதைப்பொருள் பாவனை : காவல்துறை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
Police spokesman
Sri Lanka Police
Drugs
By Sumithiran
போதைப்பொருள் பாவனை தொடர்பாக கடந்த 4 மாதங்களில் 17 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க(SSP Buddhika Manathunga) தெரிவித்தார்.
அதன்படி, போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவுகள் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
உடனடியாக பணிநீக்கம்
சந்தேகத்திற்குரிய அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், மேலும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
இத்தகைய நடத்தை முழு காவல் துறையின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிப்பதால், இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படாது என்று மனதுங்க மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்