வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து : 17 வயது சிறுவன் பலி!
மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் நேற்று (22) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
களுவாஞ்சிக்குடியை நோக்கிப் பிரயாணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியைக் கடப்பதற்காக வீதியோரமாக நின்ற சிறுவர்கள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்தில் கோடைக்கல்லாற்றைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் கிஷோர் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் வீதியை கடப்பதற்காக 3 சிறுவர்கள் நின்று கொண்டிருந்த போது வீதியால் வேகமாக வந்த குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சிறுவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்தவர் மற்றும் வீதியோரத்தில் நின்ற 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7