துரத்தி துரத்தி வெட்டிக்கொலை - பின்னணியில் சிக்கிய 17 வயது மாணவன்..!
Sri Lanka
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
மோதலாக மாறிய வாய்த்தர்க்கம்
கடந்த 31ஆம் திகதி இரவு 23 வயதான இளைஞன் ஒருவரை குறித்த சந்தேகநபர் துரத்தி சென்று வாளால் வெட்டியுள்ளார்.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதனால் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் பாணந்துறை தெற்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
