அரசு மருத்துவமனையில் மூன்று மாதத்தில் 179 குழந்தைகள் உயிரிழப்பு - அதிர்ச்சி தகவல்
India
Maharashtra
By Sumithiran
இந்தியாவின் மாகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த எடை, பிறப்பு மூச்சுத்திணறல், செப்சிஸ் மற்றும் சுவாச நோய்கள் காரணமாகவே இவ்வாறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த குழந்தைகள்
அதன்படி , ஜூலை மாதத்தில் 75 குழந்தைகளும், ஓகஸ்ட் மாதத்தில் 86 குழந்தைகளும் செப்ரெம்பரில் 18 குழந்தைகளும் உயிரிழந்துள்ளன.
70% இறப்புகள் 0-28 நாட்கள் வயதுடைய குழந்தைகள் ஆகும். பல பெண்களுக்கு இங்கு அரிவாள் செல் இருப்பதால் பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம் விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்