ட்ரம்ப் உட்பட 19 பேர் சரணடைய உத்தரவு

Donald Trump United States of America
By Sumithiran Aug 15, 2023 11:40 PM GMT
Report

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் 2020ஆம் ஆண்டு தேர்தல் தோல்வியை மறைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவர் உட்பட 18 பேரை சரணடையுமாறு அமெரிக்க நீதிமன்றமொன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் 18 பேர்  மீது ஜோர்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்ததாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப் பத்திரிகை

ட்ரம்ப் உட்பட 19 பேர் சரணடைய உத்தரவு | 18 People Including Trump Ordered To Surrender

ஃபுல்டன் கவுண்டி மாவட்ட நீதிபதி பானி வில்லீஸ் நடத்திய இரண்டு ஆண்டுகள் விசாரணையைத் தொடர்ந்து இந்த குற்றப் பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜியாவில் உள்ள அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தனது தோல்வியை மாற்றியமைக்க ட்ரம்ப் முயற்சி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பானி வில்லீஸ் இந்த விசாரணையை நடத்தினார்.

அதாவது, ஜோர்ஜியாவைச் சேர்ந்த 16 பேரை ஒருங்கிணைத்த ட்ரம்ப், அவர்களை போலி வாக்காளர்களாக பயன்படுத்தினார். தான் வெற்றிபெற்றதாகவும் அறிவித்துக்கொண்டார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு

 ட்ரம்புக்கு எதிரான 13 குற்றச்சாட்டுகள்

ட்ரம்ப் உட்பட 19 பேர் சரணடைய உத்தரவு | 18 People Including Trump Ordered To Surrender

ட்ரம்புடன் இணை சதிகாரர்களாக அவரது வழக்கறிஞர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. ட்ரம்புக்கு எதிரான 13 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 98 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், அரச பதவியில் இருந்துகொண்டு சத்தியப் பிரமாணத்தை மீறுதல், மோசடி ஆவணங்களை தாக்கல் செய்தல், மோசடியில் ஈடுபடுதல் மற்றும் பொய்யான வாக்குறுதிகள் அளித்தல் ஆகியவற்றில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார்.

ஜோர்ஜியா தேர்தல் சட்டத்தில் இரண்டை அவர் அப்பட்டமாக மீறியுள்ளார். தேர்தல் தோல்வியை ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். அத்துடன் சட்டவிரோதமாக சதி செய்து ட்ரம்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவை மாற்றியுள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை ட்ரம்ப் தரப்பினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

சரணடைய உத்தரவு

ட்ரம்ப் உட்பட 19 பேர் சரணடைய உத்தரவு | 18 People Including Trump Ordered To Surrender

இந்த நிலையில் ஓகஸ்ட் 25ஆம் திகதி ட்ரம்ப் மற்றும் அவருடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள 18 பேரும் நீதிமன்றத்தில் கண்டிப்பாக சரணடைய வேண்டுமென நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள 19 பேரையும் ஒன்றாக விசாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார். விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற குற்றசாட்டையும் நீதிபதி மறுத்துவிட்டார்.  

இதேவேளை ட்ரம்ப் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025