18 ஆயிரம் ரஷ்ய படைகள் கொன்று குவிப்பு - உக்ரைன் அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷ்யா ஈவு இரக்கமற்ற தாக்குதலை நாளாந்தம் நடத்திவருகிறது.இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
தலைநகர் கீவை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய நிலையில் அப்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 20 பொதுமக்களின் உடல்கள் கண்டெ்டுக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் போர் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 18,000 ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகள் இடையேயான போரில் 7,000 முதல் 15,000 வரை ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக நேட்டோ அமைப்பு மதிப்பிட்டிருந்த நிலையில், பலியான ரஷ்ய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.
இதேவேளை இநத உயிரிழப்பு தொடர்பில் ரஷ்ய தரப்பிலிருந்து எவ்வித உத்தியோகபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
