இலங்கை மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு...!
நாடு முழுவதும் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை 19 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதேசமயம் கடந்த ஆண்டு (2025) 29 டெங்கு மரணங்கள் பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, புத்தளம், கல்முனை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தெளிவான நீர்
தெளிவான நீர் உள்ள சூழலில் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நுளம்புக் கடியைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் சிவப்புப் புள்ளிகள் மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள், உடனடியாக மருத்துவமனையிலோ அல்லது மருத்துவரிடமோ சிகிச்சை பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேநேரம், காய்ச்சலைக் கட்டுப்படுத்த பரசிட்டமோலை (Paracetamol) மாத்திரம் எடுத்துக்கொள்ளுமாறும், ஏனைய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |