ரேணுகா விடுதி பிளட்போம்காரருக்கு அநுரவின் ஓகஸ்ட் 3 சந்திப்பு டீல்!
ஆறு தமிழ் அரசியல் கட்சிகள் நேற்று முன்தினம் (24) சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடி, சிறிலங்கா அரசதலைவர் அநுரவுடன் ஒரு சந்திப்பை நடத்த முடிவு செய்து ஒரு கடிதத்தை அனுப்பிய நிலையில் என்ன ஆச்சரியம் நேற்று அநுர தரப்பில் மளமளவென சில நகர்வுகள் நடந்தன.
இந்த மளமள நகர்வுகளால் எதிர்வரும் ஓகஸ்ட் 3 ஆம் திகதி இந்த சந்திப்பை நடத்தும் முகூர்த்தம் ரேணுகா டீல் பிளட்போம்காரருக்கு கிட்டிவிட்டது.
சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழரசு கட்சி மற்றும் எதிரணியிலுள்ள மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பதை தவிர்த்த பின்னர் அந்த நன்றிக்கு கடப்பாடோ என்னவோ உடனடியாக சந்திப்புக்கு பதில் வழங்கப்பட்டது.
அநுரவுக்கு ஒரு கடிதம் பறந்த ஒரிரு மணிநேரங்களில் இந்த சந்திப்புக்கு நாள் குறிக்கப்பட்டமை அசாதாரணம் தான் அதிலும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் நகர்வுக்கு அரசாங்கம் உறுதியாக உள்ள நிலையில் ஆகக்குறைந்தது இந்த விடயத்தில் 6 தமிழபேசும் கட்சிகளை சமரம் செய்வது தனக்கு ஆதாயமாக கூடும் என்ற அடிப்படையில் இந்த சந்திப்புக்கு அநுர விரைவாக முகூர்த்தம் குறித்திருக்காலாம்.
இந்த நிலையில் என்ன மாயமோ மந்திரமோ கடந்த சில மாதங்களாகக் கணிசமாகக் குறைந்திருந்த பாதளா டுமீல்கள் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், திடீரென மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்த விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு.........
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |