அதிகவிலைக்கு அரிசி விற்ற கடை உரிமையாளருக்கு நேர்ந்த கதி
Galle
Consumer Protection
Rice
By Jaso
காலி, அக்மீமான பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற ஒரு கடைக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையான ரூ. 255-ஐ விட அதிகமாக, ரூ. 270 என்ற விலையில் விற்றதற்காக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் காலி மாவட்ட புலனாய்வு அதிகாரிகள், காலி நீதவான் நீதிமன்றத்தில் அந்தக் கடைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
நீதிமன்றம் ரூ. 5 லட்சம் அபராதம்
கடந்த 17-ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த சட்டவிரோத விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, காலி நீதவான் நீதிமன்றம் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்