யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கு விளக்கமறியல்
Jaffna
University of Jaffna
Supreme Court of Sri Lanka
By Theepan
பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம் நாளை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டதாக யாழ் பல்கலைக்கழத்தின் 19 சிரேஸ்ட மாணவர்களை கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணை
கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று (10) மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் சந்தேக நபர்கள் 19 பேரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்