பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றுக்கு அறவிடப்படுகின்ற விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நிதியமைச்சு (Ministry of Finance) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வரி திருத்தம் மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது
விசேட பண்ட வரி
இதற்கமைய, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான வரி நேற்று (26) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கான விசேட பண்ட வரி ரூ.10ல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு கிலோவொன்றுக்கான விசேட பண்ட வரி ரூ.60 லிருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

