சர்வதேச அரங்கில் கன்னி சதத்தை பதிவு செய்த இலங்கை அணி வீரர்!
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்தநிலையில், இன்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
கன்னி சதம்
இதற்கமைய, முதலில் துப்பாடிய இலங்கை அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் சார்பில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன 103 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் திமுத் கருணாரத்ன பெற்ற முதலாவது சதம் இதுவாகும்.
இவர், 103 பந்துகளுக்கு முகங்கொடுத்து 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 103 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
நிலவரம்
அத்துடன், சதீர சமரவிக்ரம 82 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அயர்லாந்து அணியின் மார்க் அடேர் 46 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், பெர்ரி மெக்கார்த்தி 56 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்தநிலையில், அயர்லாந்து அணி 326 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகிறது.
இந்தநிலையில், சற்றுமுன்னர் வரை 20 ஓவர்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அயர்லாந்து அணி 116 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது.
