யாழில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை மோசடி செய்த இருவர் கைது!

Sri Lanka Police Colombo Jaffna United Kingdom Sri Lanka Police Investigation
By Sathangani Aug 07, 2024 04:01 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை கையாடல் செய்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணத்தை இழந்தவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “ஆலோசனைக் கட்டணங்கள் தவிர வேறு எந்தக் கட்டணமும் இன்றி வெளிநாட்டுக்குஅனுப்பப்படும் என்று சமூக வலைத்தளத்தில் இருந்த விளம்பரத்தை பார்த்து யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த ஒருவர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் பிரித்தானிய தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற பணமோசடி: தட்டிக் கேட்டவர்களுக்கு நேர்ந்த அவலம்

யாழில் இடம்பெற்ற பணமோசடி: தட்டிக் கேட்டவர்களுக்கு நேர்ந்த அவலம்

வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட பணம்  

அந்தத் தொலைபேசி இலக்கங்களில் பேசியவர்கள், வங்கிக் கணக்கில் ஒரு தொகைப் பணத்தை வைப்பிட்டுக் காட்டவேண்டும் என்றும், சில ஆவணங்களைத் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசியில் பேசியவர்களின் கதையை நம்பி, தனது கடவுச்சீட்டு பிரதிகள், அடையாள அட்டைப் பிரதிகள் உட்பட பல ஆவணங்களை குறிப்பிடப்பட்ட கொழும்பு முகவரி ஒன்றுக்கு அனுப்பியுள்ளார்.

யாழில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை மோசடி செய்த இருவர் கைது! | 2 Arrest For Defrauding 65 Lakh Rs In Bank Account

அவர்கள் குறிப்பிட்ட தொகையை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு, வங்கிச் செயலியில் கணக்குமீதியை ஸ்கீரின் சொட்  (Screen Shot) எடுத்தும் அனுப்பியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 27ஆம் திகதி குருநகரைச் சேர்ந்தவரது கைபேசி இலக்கம் செயலிழந்துள்ளது. சிலநாட்களின் பின்னர் வங்கிக்குச் சென்று தனது கணக்கு மீதியைச் சரிபார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவும் காணாமல் போயிருந்த நிலையில், யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் அது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழில் தபால் நிலைய ஊழியரின் வீடு தீக்கிரை...! காவல் நிலையத்தில் முறைப்பாடு

யாழில் தபால் நிலைய ஊழியரின் வீடு தீக்கிரை...! காவல் நிலையத்தில் முறைப்பாடு

இருவர் கைது

யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழு இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தது.

விசாரணைகளின் அடிப்படையில் பெண் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை மோசடி செய்த இருவர் கைது! | 2 Arrest For Defrauding 65 Lakh Rs In Bank Account

இந்த நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருநகரைச் சேர்ந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டும், அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டும் லாவகமான முறையில் வங்கிக் கணக்கில் இருந்த பணம் வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குருநகரைச் சேர்ந்தவரின் கைபேசி இலக்கத்தைச் செயலிழக்கச் செய்து, அவரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டு ஈ-சிம் ஒன்று சந்தேகநபர்களால் பெறப்பட்டுள்ளது.

யாழ். மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ். மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணே கைபேசி நிறுவனத்துக்குச் சென்று உரையாடி, அந்த இலக்கத்துக்குரியவர் தற்போது தாய்லாந்தில் உள்ளார் என்று தெரிவித்து, தாய்லாந்து தொலைபேசி இலக்கத்தில் ஒருவரை உரையாட வைத்து ஈ-சிம்மைப் பெற்றுள்ளார்.

அதனால் பணப்பரிமாற்றம் தொடர்பான குறுந்தகவல்கள் உரியவருக்குக் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. தாம் சேகரித்த ஆவணங்கள் தகவல்கள் என்பவற்றைக் கொண்டு, குருநகரைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்குக்குள் செயலி ஊடாக நுழைந்த சந்தேநபர்கள், தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணின் வங்கிக் கணக்குக்கே முதலில் பணம் மாற்றப்பட்டுள்ளது.

யாழில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை மோசடி செய்த இருவர் கைது! | 2 Arrest For Defrauding 65 Lakh Rs In Bank Account

அதன்பின்னர் மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. அந்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் தகவல் தொழில்நுட்ப துறையில் (IT) பணியாற்றுபவர் என்று கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுர விநியோகம்

யாழில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுர விநியோகம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி