ஈராக்கில் ட்ரோன் தாக்குதல் : பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு
ஈராக்கின் வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில், பிரான்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், பல வீரர்கள் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எர்பில் (Erbil) பிராந்தியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆறு பிரான்ஸ் வீரர்கள் இந்த ஆளில்லா விமான தாக்குதலில் காயமடைந்ததாக பிரான்ஸ் இராணுவம் நேற்று (12) தெரிவித்தது.
இப்பகுதியில் உள்ள இத்தாலிய தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதியில் உள்ள இஸ்லாமிய அரச (IS) ஆயுதக் குழுக்களுக்கு எதிராகப் போராடும் சர்வதேசக் கூட்டணியின் ஒரு பகுதியாக, எர்பில் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான பிரான்ஸ் வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2015 முதல் டேஷ் (ISIS) க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நமது படைகளுக்கு எதிரான இந்தத் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று பிரான்ஸ் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |