துருக்கியில் உள்ள நேட்டோ விமானப்படை தளத்திற்கு தாக்குதல் எச்சரிக்கை
துருக்கியின் இன்சிர்லிக் விமானப்படை தளத்தில் இன்று அதிகாலை சைரன்கள் கேட்டதால் தாக்குதல் எச்சரிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தென்கிழக்கு நகரமான அடானா அருகே அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ள ஒரு முக்கிய நேட்டோ தளமாகும்.
துருக்கிய வான்வெளியில் நேட்டோ வான் பாதுகாப்பு ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய நான்கு நாட்களுக்குப் பிறகு குறித்த சைரன்கள் ஒலித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிவப்பு எச்சரிக்கை
தளத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அதனாவில் வசிப்பவர்கள், உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:25 மணியளவில் சுமார் ஐந்து நிமிடங்கள் சைரன்கள் ஒலித்ததாக கூறப்படுகிறது.

இதன்போது தளத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நகரம் முழுவதும், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் சைரன்கள் நீண்ட நேரம் கேட்டதாக அது மேலும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |