அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அலுவலகம் நாளை திறக்கப்படவுள்ளது.
இதன்படி, நாளையதினம்(04) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு 07, மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள ஆணைக்குழு அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
2026 ஜூன் 22 ஆம் திகதியிடப்பட்ட 2494/ 05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைவாக இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் முக்கிய நோக்கங்கள்
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரச ஊழியர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துதல் புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவையில் எவ்வாறான கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன குறித்த பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நோக்கங்களை அடைவதற்காக தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கோரும் நடவடிக்கையும் செவ்வாய்க்கிழமை (04) உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
கனடாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து எத்தியோப்பாவில் கடத்தப்பட்ட வடபகுதி இளைஞர்கள் :சூத்திரதாரி வன்னியில் கைது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |