மண்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்பு!
Sri Lankan Peoples
Climate Change
Weather
By Dhilak
ஹட்டன், கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் ஒரு வீட்டின் மீது ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகளின் போது, முதலில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டிருந்தது.
மீட்கப்பட்ட உடல்கள்
அதனைதொடர்ந்து, மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய மழை நிலைமை நாளை (04) பிற்பகலுக்குள் தணியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்