வெளிநாடொன்றில் பெரும் மோசடி: இரண்டு இலங்கையர் உட்பட 149 பேர் கைது
பாகிஸ்தானின்(pakistan) பஞ்சாப் மாகாணத்தின், பைசாலாபாத் நகரில் உள்ள ஒரு மோசடி அழைப்பு மையத்தில் நடந்த பாரிய சோதனையைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 149 நபர்களில் இரண்டு இலங்கையர்கள் அடங்குவதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் (NCCIA) இன்று (10)வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.
இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், போன்சி திட்டங்கள் மற்றும் போலி முதலீட்டு மோசடிகளில் ஈடுபட்ட பெரிய அளவிலான மோசடி நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாக NCCIA அதிகாரிகள் தெரிவித்தனர். அதிக வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகள் என்ற போர்வையில் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டு பெரும் தொகை மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு நாட்டவர்கள் அடக்கம்
கைது செய்யப்பட்டவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், எட்டு நைஜீரியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், ஆறு வங்கதேசிகள், இரண்டு மியான்மர் நாட்டவர்கள், ஒரு சிம்பாப்வேக்காரர் மற்றும் இரண்டு இலங்கையர்கள் அடங்குவர்.
இந்த மோசடியின் சர்வதேச தன்மை, சைபர் மற்றும் நிதி குற்றங்களைச் சமாளிப்பதில் எல்லை தாண்டிய ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
