இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா பயங்கர ஏவுகணை தாக்குதல்
லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலில் உள்ள கோலன் குன்றுகள்மற்றும் அப்பர் கலிலியை நோக்கி சுமார் 20 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
ஹெஸ்புல்லாவுடன் இணைந்த லெபனான் ஊடகங்கள், எல்லைக்கு அருகில் உள்ள கோலன் குன்றுகளில் பல இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடிக்கும் காட்சிகளை வெளியிட்டன.
ஹெஸ்புல்லா நிலைகளை தாக்கி அழித்ததாக
இதேவேளை லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா நிலைகளை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்து உள்ளது.
غارة بين سجد وعرمتى وأخرى على خراج شبعا وكفركلا pic.twitter.com/phobAbYGQw
— LBCI Lebanon News (@LBCI_NEWS) November 7, 2023
லெபனானில இருந்து வடக்கு இஸ்ரேல் மீது 20 ஏவுகணைகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில் புதிய அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
அதிகரித்துள்ள பதற்றம்
நேற்று தெற்கு லெபனானில் கார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களது பாட்டி கொல்லப்பட்டதை அடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
The @IDF struck targets belonging to #Hezbollah, including a weapons warehouse, rocket launchers, infrastructure for directing terrorism, and sites where Hezbollah has technological devices, in response to rocket fire earlier.
— The Jerusalem Post (@Jerusalem_Post) November 7, 2023
?https://t.co/jxmwdbDbCE
?IDF Spokesperson's Unit pic.twitter.com/lIdJq1cB9U