இஸ்ரேல்-ஹமாஸ் போர் : நிலையான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய மோடி
Narendra Modi
Iran
Israel-Hamas War
By Vanan
இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால நிலையான நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியை பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார்.
காசாவின் ஸ்திரத்தன்மை
இந்த உரையாடலின்போதே இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்தும், இந்திய - ஈரான் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர் எனக் கூறப்படுகிறது.
மேலும் போர் தீவிரமடைவதை தடுப்பது, தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை உறுதி செய்து, கலவரத்தால் பாதிக்கப்பட்ட காசாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி