காதலிப்பதாக கூறி 14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 20 வயதான இளைஞர் - யாழில் சம்பவம்
காதலிப்பதாக கூறி 14 வயதான சிறுமியை அழைத்துச் சென்ற குற்றச்சாட்டில் 20 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சிறுமியும் மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை காவல்துறையினர் தொிவித்திருக்கின்றனர்.
மல்லாகம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி பாடசாலை சென்றவேளையே குறித்த இளைஞர் புதுக்குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரியிம் முற்படுத்த நடவடிக்கை
சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தெல்லிப்பழை காவல் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சிறுமி மீட்க்கப்பட்டுள்ளார்.
மேலும், இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிம் முற்படுத்த பரிசோதனைக்குட்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்