2025 இறுதியில் மிகப்பெரிய அலை எழும்: பாபா வாங்காவின் அச்சமூட்டும் கணிப்பு
ஜப்பானின் பாபா வாங்கா 2025-ல் மிகப்பெரிய அலை எழும் என்ற பாபா வாங்காவின் கணிப்புகள் மீண்டும் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். அவருக்கு பார்வை பறிபோன பின்னர், எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
அவர் இறப்பதற்கு முன்பு, ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்னரே கணித்துள்ளார். பின்னர் அவற்றை குறிப்புகளில் எழுதினார். பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்கா கணித்த பல உலக நிகழ்வுகள் உண்மையாகி உள்ளன.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்நிலையில், சமீபத்தில் ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது.

இதனால் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.
இதைப் பார்க்கும் போது 2025 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.
ஏனெனில் பல்கேரிய பாபா வாங்காவும், ஜப்பான் பாபா வாங்காவும் ஜப்பானில் ஒரு பயங்கர பேரழிவு ஏற்படும் என்று ஏற்கனவே கணித்திருந்தனர்.
இயற்கை பேரழிவு
அதுவும் ஜப்பானின் பாபா வாங்கா 2025-ல் மிகப்பெரிய அலை எழும் என்று கூறியிருந்தார்.

அதே வேளையில் பல்கேரிய பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு பயங்கர இயற்கை பேரழிவு ஏற்படும் என்று குறிப்பில் கணித்து குறிப்பிட்டிருந்தார்.
அதற்கேற்ப இலங்கையில் டிட்வா புயல் மற்றும் தற்போது ஜப்பானில் பயங்கர நிலநடுக்கத்டன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது சற்று அச்சத்தை ஏற்படுத்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |