ரபா எல்லையில் காத்திருக்கும் 200 பிரித்தானியர்கள்
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் 200 பிரித்தானியர்கள் ரபா எல்லையில் காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து 21 நாட்களாக நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் 7000 திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 200க்கும் அதிகமானோர் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் .
200 பிரித்தானியர்கள்
இந்நிலையில் பல நாடுகள் இந்த தாக்குதலில் பாதிக்கபட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளது .
இதனைத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் நோக்கில் கடந்த வாரம் ரபா எல்லை திறக்கப்பட்டது.
காசாவை விட்டு வெளியேறுவதற்கான ஒரே வழியாக காசாவிற்கும் எகிப்திற்கும் இடையில் உள்ள ரபா கிராசிங் மட்டுமே காணப்படுகின்றது.
ரபா எல்லை
எனினும் அதிரடியாக இஸ்ரேல் இராணுவ தாங்கிகள் வடக்கு காசா பகுதிக்குள் புகுந்து தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரபா எல்லை திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ரபா எல்லை திறக்கப்படும் என்ற எண்ணத்தில் 200 பிரித்தானியர்கள் காத்திருக்கின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய மக்களை மீட்டு வருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.