நாடு தழுவிய ரீதியில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
நாடு தழுவிய ரீதியில் ஆசிரியர் சங்கங்கள் பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இக் கவனயீர்ப்புப் போராட்டமானது இன்று (27) இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினரால் நடத்தப்பட்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தினால் பலர் காயமடைந்துள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
இந்த அத்துமீறலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், இன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு பாடசாலை நிறைவடைந்த பிறகு பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை இன்றுடன் (27) முடிவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், மூன்றாம் தேவைக்கான கல்வி நடவடிக்களுக்காக பாடசாலைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        