யாழில் தினமும் காவல்துறையினரிடம் சிக்கும் 200 பேர்
யாழ்ப்பாணத்தில் தினமும் 200 பேர் வரையில் போக்குவரத்து விதிமீறலினால் பிடிக்கப்படுவதாக யாழ்.மாவட்டப் பிரதிப் காவல்துறைமா அதிபர் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “அண்மைக்காலமாக, யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே காவல்துறையினர் இத்தகைய நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தண்டப்பணம்
தலைக்கவசம் அணியாது வாகனம் செலுத்தல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் இதர பத்திரங்கள் இல்லாது வாகனம் செலுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக தினமும் சுமார் 200 பேர் பிடிக்கப்படுகின்றனர்.
மேலும், பிடிக்கப்பட்டு தண்டப்பணமும் விதிக்கப்படுகின்றது. இதில் 10 வீதமானவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்“ எனவும் தெரிவித்துள்ளார்.