பிள்ளையானால் கிழக்கில் உருவாகிய மர்ம இருள்: ஊடகவியலாளரின் திகிலூட்டும் உண்மைகள்
Pillayan
Sri Lanka
Sri Lankan political crisis
By Shalini Balachandran
தமிழர் அரசியல் பரப்பில் மிகவும் முக்கிய விடயமாக பிள்ளையானின் சகாவான இனியபாரதியின் கைது அண்மைய நாட்களாக பேசப்பட்டு வருகின்றது.
இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து அவர் செய்ததாக குறிப்பிட்டு ஒரு நீண்ட கடத்தல் மற்றும் கொலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்,
- கிழக்கின் ஒரு இருண்ட ஆயுத யுகத்தை ஏற்படுத்திய கருணா குழுவின் பிற்கால தலைவர்கள்,
- சிறிலங்கா அரச இராணுவ புலனாய்வாளர்களாக பயன்படுத்தப்பட்ட பிள்ளையான் மற்றும் இனியபாரதி ஆகியோரின் அட்டூழீயங்கள்,
- அக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மக்கள் அனுபவித்த துன்பங்கள்,
என்பவை தொடர்பில் கருணா குழுவின் கொலைப்பட்டியலில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய ஒருவரும் 2004 காலப்பகதியில் நேரடியான ஊடகப்பணியாற்றியவருமான மூத்த ஊடகர் இரா.துரைரெத்தினம், அறியப்படாத பல உண்மைச் சம்பவங்கள் தொடர்பான சாட்சியாக தனது வாக்குமூலத்தை ஐபிசி தமிழில் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களை சுமந்து வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய சக்கரவியூகம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
