இலங்கையை உலுக்கும் தொடர் துப்பாக்கிச் சூடுகள் : பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளை சீர்குலைத்து, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி. டிபிள்யூ. ஆர். டி. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) உள்ள தகவல் ஊடக அமைச்சில் சனிக்கிழமை (22.02.2025) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் அக்குழுக்கள் தொடர்பிலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கெதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் 5 பதிவாகியுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளை சீர்குலைத்து, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
