இஸ்ரேலை நோக்கி 200 ஏவுகணைகள்: அதிரும் இஸ்ரேல் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய அந்த அதிரடி வான்வழித் தாக்குதல், மத்திய கிழக்கில் ஒரு மகாயுத்தத்திற்கான அஸ்திவாரத்தைப் பலமாக இட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் இராணுவ நிலைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச அதிகாரம் கொண்ட தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட செய்தி ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியிருக்கிறது.
இதற்குப் பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் படைகளை ஏவி இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் ஒரு தீப்பொறித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் எல்லைக்குள் நுழைய பதிலுக்கு இஸ்ரேல் பெய்ரூட் நகர் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது.
இதனால் இந்தப் போர் தற்போது அண்டை நாடுகளுக்கும் காட்டுத்தீயாய்ப் பரவி வருகிறது.
இந்தக் கடுமையான போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேல் தற்போது எதிர்கொண்டு வரும் சவால்கள் என்ன ? அந்நாட்டு மக்களின் நேரடி நிலைப்பாடு மற்றும் போர் முனையின் உண்மைச் சூழல் குறித்து விரிவான பார்வையைத் தளத்திலிருந்து நேரடியாக முன்வைக்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |