முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றில் இடமளிக்க வேண்டும்: டக்ளஸ் வலியுறுத்து!
மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா புதிய திட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
பல்வேறு துறைசார்ந்த புத்திஜீவிகளையும் உள்ளடக்கிய அரச சார்பற்ற நிறுவனத்தின் (OTI) பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே இக்கருத்து வெளிப்படுத்தப்பட்டது.
இதன்போது மேலும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, “மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை செழுமைப்படுத்துவதற்கும், இனங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கும், சீரான வளர்ச்சியை வேகமாக ஏற்படுத்துவதற்கும், மாகாணங்களின் முதலமைச்சர்கள் நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கும் ஏற்பாடு அர்த்தபூர்வமான களத்தினை ஏற்படுத்தும்.
டக்ளஸ் தேவானந்தாவின் புதிய திட்டம்
அதேபோன்று, யுத்தம் காரணமாக. 18 வயதினை அடைந்த பின்னர் புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கும், தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் தங்கி இருப்போருக்கும் வாக்குரிமையை வழங்க வேண்டும்.

அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வே புதிய அரசியலமைப்பின் அடிப்படையாக இருக்க வேண்டுமே தவிர, ஒற்றையாட்சி, சமஸ்டி என்ற பெயர் பலகையில் கவனத்தினை குவிப்பது, பிடிவாதமாக இருப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது.
கடந்த காலங்களில் மத்திய அரசினால் எடுக்கப்பட்ட மாகாணங்களிற்கான அதிகாரங்களை மீளக் கையளிப்பதுடன், காவல்துறை மற்றும் காணி உட்பட்ட மாகாண சபை அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்