ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
Sri Lankan rupee
Commercial Bank
People's Bank
Dollars
By Kathirpriya
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்றைய தினத்தை (11) காட்டிலும் இன்று ( 12) ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்
இதன் அடிப்படையில் மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 304.61 முதல் ரூ. 305. 58 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 319.59 முதல் ரூ. 320.61 ஆகவும் காணப்படுகிறது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூ. 304. 61 முதல் ரூ. 305.83 மற்றும் ரூ. 317 முதல் ரூ. 319 ஆக காணப்படுகிறது.
இவற்றுக்கிடையில் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 302 முதல் ரூ. 305 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 317 முதல் ரூ. 320 ஆகவும் காணப்படுகின்றது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி