2023ஆம் ஆண்டில் முதல் சதத்தை பதிவு செய்த சென்னை வீரர்!
2022 மற்றும் 2023 என அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளும் சர்வதேச களத்தில் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் நியூஸிலாந்து வீரர் டெவான் கான்வே.
2022-ல் உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும், 2023-ல் வெளிநாட்டு டெஸ்ட் போட்டியிலும் அவர் ஆண்டின் முதல் சர்வதேச சதங்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் துடுப்பாட்ட தொடரில் விளையாடி வருகிறது.
சிறப்பான ஆட்டம்
இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே.
கராச்சியில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் 191 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உள்ளடங்களாக 122 ஓட்டங்களை எடுத்தார்.
இதில் கடந்த 2021-ல் டெஸ்ட் துடுப்பாட்ட போட்டிகளில் அவர் அறிமுகமானார். இதுவரை 12 போட்டிகளில் மொத்தம் 21 இன்னிங்ஸில் விளையாடி 4 சதம் மற்றும் 5 அரை சதங்களும் அவர் பதிவு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
கடந்த 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் நியூஸிலாந்து நாட்டில் பங்களதேஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் 122 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் மூலம் 2022 மற்றும் 2023 என இரு ஆண்டுகளின் தொடக்கத்திலும் முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த வீரராகி உள்ளார்.
31 வயதான அவர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 309 ஓட்டங்களை எடுத்திருந்தது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
