இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து! சமன் செய்யப்பட்ட டோனியின் சாதனை
புதிய இணைப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
போட்டி ரத்துச்செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
முதலில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிய நிலையில், 48.5 பந்துப்பரிமாற்றங்களில் சகல விக்கட்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.
267 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடவிருந்த நிலையில், மழையின் காரணமாக போட்டி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி சார்பில் இசான் கிசான் 82 ஓட்டங்களையும் ஹார்த்திக் பாண்டியா 87 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றுக்கொடுத்துள்ளனர்.
தொடர்ச்சியான அரைச் சதம்
இந்ந நிலையில், இன்று இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷான் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு அரைச் சதங்கள் அடித்து டோனியின் சாதனையைச் சமப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த ராகுலுக்கு பதிலாக விக்கட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்ற இஷான் கிசான் இன்றைய போட்டியில் 82 ஓட்டங்கள் எடுத்தார்.
கடந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் அரைச் சதமடித்த அவர் தற்போது இந்தப் போட்டியிலும் தொடர்ந்து 4ஆவது முறையாக 50 ஓட்டங்கள் கடந்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் 50 ஓட்டங்கள் அடித்த இந்திய விக்கட் கீப்பர், முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ் டோனியின் 12 வருட தனித்துவமான சாதனையை சமன் செய்துள்ளார்.
மூன்றாம் இணைப்பு
4 ஓவர்கள் மட்டுமே விளையாடிய நிலையில் மைதான வளாகத்தில் மழை பெய்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
முதலில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிய நிலையில், 4 ஓவர்களும் 2 பந்துகளுமே வீசப்பட்டிருந்து.
அதுவரை இந்திய அணி 15 ஓட்டங்கள் மட்டுமே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது.
இந்த போட்டியானது இலங்கையில் உள்ள கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இறுதி ஆட்டத்துக்கு இணையான பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி, இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர்
சுகயீனத்தில் இருந்து குணமடைந்து ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளமையினால் நான்காம் இடத்தில் யார் விளையாடுவார் என்ற பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து நான்காம் இடத்தில் களமிறங்கி அதிக ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.