வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றோரின் எண்ணிக்கையில் வரலாற்று சாதனை
இலங்கை வரலாற்றில் வேலைவாய்ப்புக்காக அதிகளவானோர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஆண்டாக 2024 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 2022 இல் அதிகளவானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புறப்பட்டதாக தரவுகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடந்த 2019 முதல் 2024 வரையான ஆறு வருடங்களில் மொத்தம் 1.3 மில்லியன் பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி
2024 ஆம் ஆண்டில், 185,162 ஆண்களும் 127,674 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர்களில் 77,546 பேர் குவைத்துக்கும் (Kuwait) 51,550 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கும் (United Arab Emirates) சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தென் கொரியா (7098), இஸ்ரேல் (9665), ஜப்பான் (8665) ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணியும் 2024 இல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ள நிலையில் நவம்பர் மாத இறுதியில் 6,462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அது பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |