புலமை பரிசில் பரீட்சை : வெளிவரவுள்ள இறுதி தீர்மானம்
புலமைப்பரிசில் பரீட்சை விவகாரத்தின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பரீட்சை திணைக்களத்தின் இறுதி தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இறுதி தீர்மானம் இன்று (01) அறிவிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (31) தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
வினாக்கள் விடப்பட்டமை
இந்தநிலையில், பரீட்சையில் மூன்று வினாக்கள் விடப்பட்டமை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் மூன்று பரிந்துரைகளில் சிறந்த தீர்வை நடைமுறைப்படுத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று (31) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைடிப்படையில், இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஏழு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் அடங்கிய குழு, முன்பு வந்த மூன்று கேள்விகளுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது, அந்த மூன்று கேள்விகளை நீக்குவது அல்லது முதல் வினாத்தாளை இரத்து செய்து புதிய தேர்வை நடத்துவது போன்ற பரிந்துரைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்