அடுத்த ஆண்டு ஐபிஎல்: சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக விளையாடும் தமிழக வீரர்
அடுத்த வருட ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சி.எஸ்.கே (csk) அணிக்கு தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவரை வாங்குவதற்கு சி.எஸ்.கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 ஐ.பி.எல் சீசனோடு கேப்டனும் கீப்பருமான தோனி ஓய்வுபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில் அவருக்கு மாற்று வீரராக ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.
எனவே எதிர்வரும் 19 ம் திகதி ஐ.பி.எல் ஏலம் நடைபெற உள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தோனியின் ஓய்வு
இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்களாக முரளி விஜய், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெகதீசன் ஆகியோர் விளையாடியிருந்தாலும் அதன் பின்னர் தமிழக வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தோனிக்கு மாற்று விக்கெட் காப்பாளராக தமிழக வீரரான 21 வயதுடைய ஜி.அஜிதேஷ் குருசாமி ஏலத்தில் வாங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த டி.என்.பி.எல் சீசனில் நெல்லை அணிக்கு சிறந்த பங்களிப்பை செலுத்தியதோடு சிறந்த பினிஷராகவும் செயல்பட்டார். மேலும் மினி ஏலத்தில் இவரின் விலை 20 லட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வீரர்கள்
சிறந்த துடுப்பாட்ட வீர் சிறந்த பினிஷர் மற்றும் விக்கெட் காப்பாளராக உள்ளதால் சி.எஸ்.கே அணி நிர்வாகம் இவரை வாங்க முடிவு செய்துள்ளது.
ஐ.பி.எல் 17ஆவது சீசனுக்கான ஏலத்திற்கு முன்னதாக சி.எஸ்.கேவில் இருந்து டுவைன் பிரிடோரியஸ், சிசாண்டா மகாலா, சேனாபதி, பென் ஸ்டோக்ஸ், ஜேமிசன், அம்பத்தி ராயுடு, பகத் வர்மா, ஆகாஷ் சிங் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதால் சி.எஸ்.கேவுக்கு 31.40 கோடி ருபாய் மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |