ஐபிஎல் ரசிகர்களால் கடுமையாக எதிர்க்கப்படும் ஹர்திக் பாண்டியா: காரணம் இதுதான்!
இந்தியன் பிரீமியர் லீக் என்பது உலகின் பணக்கார உரிமையாளர்களின் ஒரு கிரிக்கெட் போட்டியாகும், தற்போது 2024 ஆண்டுக்கான போட்டி நடைபெற்று வருகிறது.
அதன்படி, குறித்த போட்டியில் பங்குபற்றும் 10 அணிகளில் ஒரு அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருந்து வருகிறது.
இந்நிலையில், 2024 ஆண்டுக்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சகலதுறை வீரரான ஹர்திக் பாண்டியாவிற்கு ரசிகர்களால் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மும்பை அணி தலைவர்
சகலதுறை வீரரான ஹர்திக் பாண்டியா, 2021 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார் மற்றும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு தலைவராக இருந்து வந்தார்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2024 போட்டியில் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைவராக இருந்த ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அணி தலைவராகவும் ஹர்திக் பாண்டியா தெரிவு செய்யப்பட்டார்.
ரசிகர்களின் எதிர்ப்பு
எனினும், இந்த தீர்மானத்தை ஏற்காத மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பாண்டியாவை கிண்டல் செய்வதன் மூலம் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அத்தோடு, இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி அகமதாபாத், ஐதராபாத் மற்றும் மும்பையில் நடந்த போட்டிகளில் பங்கேற்றதுடன் அணி நிர்வாகம் எதிர்பாராத வகையில் அந்த மூன்று போட்டிகளிலும் மும்பை அணி தோல்வி அடைந்தது.
இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைவராக செயற்பட ஹர்திக் பாண்டியாவிற்கு தகுதி இல்லை என ரசிகரகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |