இரண்டு வருடங்களின் பின்பு மீண்டும் ஈரானில் நாடாளுமன்ற தேர்தல்
இரண்டு வருடங்களுக்கு பிறகு ஈரானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஈரானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது.
குறித்த தேர்தலின் வாக்கெடுப்பானது இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி வாக்கெடுப்பு பணிகள் மாலை 6 மணி வரை நடைபெற்றுள்ளது.
தேர்தல்
இந்நிலையில் நடைபெற்ற தேர்தலில் சுமார் 15 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தேர்தலுக்காக, ஈரான் முழுவதும் 59 ஆயிரம் வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டதோடு சுமார் 61.5 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகளை பயன்படுத்தி இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதி முடிவு
அத்தோடு தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில், 2 இலட்சத்து 50 ஆயிரம் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, வாக்குகள் பெரும்பாலும் கைமுறையாக எண்ணப்படுகின்றமையால் இறுதி முடிவு மூன்று நாட்களுக்கு அறிவிக்கப்படாது இருப்பினும் பகுதி முடிவுகள் நாளை விரைவில் வெளியாகலாமென்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |