புத்தாண்டு விடுமுறை: மக்களின் தேவைகளை இலகுபடுத்திய ரணில்
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு(sinhala and tamil new year) விடுமுறையின் போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய பொது சேவை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகிய அமைச்சுகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டுக் காலத்தில், நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் விரிவான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் பாதுகாப்புப் படையினருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
இந்நிலையில், மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |