உயர்தரப் பரீட்சை : பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை (G.C.E A/L) மற்றும் பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (DOE) தெரிவித்துள்ளது.
அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குரிய அனுமதி அட்டைகளை அந்தந்த வலயக்கல்வி உதவி கல்வி பணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே (Indika Kumari Liyanage) தெரிவித்துள்ளார்.
அத்துடன் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம், அவர்களின் தனிப்பட்ட தபால் முகவரிகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ இணையத்தளம்
பரீட்சாத்திகளின் பெயர்கள், பாடங்கள் தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருந்தால், அத்தகைய மாற்றங்களை உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் செய்யலாம் என்றும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் அனைத்து திருத்தங்களும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் செய்துகொள்ள வேண்டும் எனவும் பரீட்சாத்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
அத்துடன் பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை டிசம்பர் 6 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 1,665 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்