வெளியானது GIT பரீட்சையின் பெறுபேறுகள்...!

Sri Lanka Department of Examinations Sri Lanka Education
By Shalini Balachandran Jul 20, 2026 07:04 PM GMT
Report

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்ததோடு அவர்களுள் பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 199,598 ஆகும்.

அத்தோடு 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்குவர்.

மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூண்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் விபரீத முடிவால் பரபரப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூண்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் விபரீத முடிவால் பரபரப்பு

ஆவணங்களைப் பதிவிறக்கம் 

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 1,669 பரீட்சை மத்திய நிலையங்களில், 325 இணைப்பு மத்திய நிலையங்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இப்பரீட்சைக்கு இம்முறை 147,407 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

வெளியானது GIT பரீட்சையின் பெறுபேறுகள்...! | 2025 Git Examination Results Released

விண்ணப்பதாரர்கள் தங்களது பரீட்சை சுட்டிலக்கத்தை சரியாக உள்ளிடுவதன் மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk ஆகியவற்றிற்குள் பிரவேசித்து பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி முதல் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செம்மணியில் இன்று சிசு உட்பட சிறுவர்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணியில் இன்று சிசு உட்பட சிறுவர்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள்

அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் https://onlineexams.gov.lk/eic இணையத்தளத்தின் Personal Account Login ஊடாக தங்களது பரீட்சை சுட்டிலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெறுபேறு ஆவணத்தை (Results Schedule) பதிவிறக்கம் செய்ய முடியும்.

அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic இன் School Account Login பகுதிக்குள் பிரவேசித்து அந்தந்த பாடசாலையின் முழுமையான பெறுபேறு ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வெளியானது GIT பரீட்சையின் பெறுபேறுகள்...! | 2025 Git Examination Results Released

அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் தத்தமது வலயத்திற்குரிய பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக பயனர் பெயர்களும் கடவுச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் வினவல்களிருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  •  உடனடி அழைப்பு இலக்கம்: 1911
  • தொலைபேசி இலக்கங்கள்: 011284208 / 0112784537 / 0112785922
  • தொலைநகல் (Fax) இலக்கம்: 0112784422

2030 FIFA உலகக் கோப்பைக்கு ஆறு அணிகள் தகுதி!

2030 FIFA உலகக் கோப்பைக்கு ஆறு அணிகள் தகுதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020