ஆயிரக்கணக்கான மதுபான சாலைகள் மூடப்படும் அபாயம்
பல மதுபான ஆலைகள் மற்றும் மதுபானக் கடைகள் வரி செலுத்தாததால், 2025ம் ஆண்டுக்கான மதுவரி உரிமம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் சுமார் 4,500 மதுபான நிறுவனங்கள் மற்றும் மதுபானசாலைகள் உள்ளதாகவும், தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான உரிமங்களை சுமார் 200 பேருக்கு பெற்றுக்கொள்வதற்கான வரி அனுமதி அறிக்கைகளை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் இருந்து மதுவரி திணைக்களம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட முறையில் வரி செலுத்தியவர்களின் அனுமதி அறிக்கைகளை உள்நாட்டு இறைவரி திணைக்களம் மதுவரி திணைக்களத்திற்கு வழங்கும் என மதுபான அனுமதிப்பத்திரம் பெறுவோர் சங்கத்தின் தவிசாளர் அஜித் உடுகம தெரிவித்துள்ளார்.
அனுமதி அறிக்கை
அத்தோடு, இதுவரை செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாதவர்களும் உரிய வரியைச் செலுத்தி அதற்கான தகுதிகளைப் பெற்று அனுமதி அறிக்கைகளை அனுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடந்த வருடங்களில் பல்வேறு முறைகளின் மூலம் கலால் திணைக்களத்திற்கு அனுமதி அறிக்கைகளை அனுப்பிய போதிலும், இம்முறை அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதது மதுவரி திணைக்களத்திற்கு அனுமதி அறிக்கைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
You may like this,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

