வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதம்
2027ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றும் (23) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
2027ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, கடந்த 20 ஆம் திகதி 97 வாக்குகள் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக மொத்தம் 157 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததுடன் 60 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
இந்தநிலையில் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமான குழு நிலை விவாதம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நவம்பர் 12ஆம் திகதி வரவு-செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 13ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தொடங்கியது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமர்ப்பிக்கும் மூன்றாவது வரவு-செலவுத் திட்டமான இது, இலங்கையின் வரலாற்றில் 81-ஆவது வரவு-செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |