ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்!
மறைந்த மூத்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (23-01-2026) ஐபிசி தமிழ் (IBC Tamil) தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது, ஊடகவியலாளர் பிரேமானந்த், சுகிர்தராஜனின் ஊடகப் பணி மற்றும் அர்ப்பணிப்பு குறித்த நினைவுகளை ஐபிசி தமிழ் ஊழியர்களிடையே பகிர்ந்து கொண்டார்.
நினைவு தினம்
அத்தோடு ஊடகவியலாளர் சுகிர்தராஜனுடன் இணைந்து, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவும் இதன்போது நினைவுகூரப்பட்டார்.

திருகோணமலை ஐந்து மாணவர்கள் படுகொலை உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய சுகிர்தராஜனின் தியாகம், ஊடகத்துறையில் இன்றும் ஒரு மைல்கல்லாகப் போற்றப்படுகிறது
இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஐபிசி தமிழ் நிறுவனப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


