பொய்த்தகவலைப் பரப்ப வேண்டாம்..! ஈரானிடம் சிக்கிய ட்ரம்ப்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலையீட்டினால் ஈரான் 800 பேரின் மரண தண்டனையை நிறுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்படும் கருத்து முற்றிலும் பொய் என ஈரான் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை ஈரானின் தலைமை வழக்கறிஞர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி அதிகரித்ததால், அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது.
போராட்டக்காரர்கள்
இதன்போது போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது.
இதற்கிடையே, தனது தலையீடு காரணமாகவே ஈரான் 800 பேரின் மரண தண்டனையை நிறுத்தியுள்ளது என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
மரண தண்டனை
இந்த நிலையில், ட்ரம்ப் சொல்வது பொய் என ஈரான் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், ட்ரம்ப் சொல்வது தவறானது எனவும் அப்படிப்பட்ட எந்த எண்ணிக்கையும் எங்களிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நீதித்துறை அப்படிப்பட்ட எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் நாடு தழுவிய போராட்டம் காரணமாக மிகப்பெரிய அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாகவும், கைது செய்யப்பட்ட சிலர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |