இந்தியாவில் கோர விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு:இரங்கல் தெரிவித்த நரேந்திர மோடி
இந்தியாவின் (India) ஜம்மு மற்றும் காஷ்மீர் (Kashmir) பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இருந்து ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோயிலுக்கு பயணிகளுடன் புறப்பட்ட பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து அக்னூர் நகரின் தாண்டா பகுதிக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து பேருந்தில் பயணித்த 21 பேர் பலியாகியதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதி்த்துள்ளனர்.
நரேந்திர மோடி இரங்கல்
இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
