கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட21 கிலோ தங்கம் மாயம் - பின்னணியில் அமைச்சரின் மகன்
Bandaranaike International Airport
Gold smuggling
By Sumithiran
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 21 கிலோ தங்கம் காணாமல் போயுள்ளதாக இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன் பின்னணியில் அரச அமைச்சர் ஒருவரின் மகன் இருப்பதாக அதன் தலைவர்களான ஜமுனி கமந்த துஷார மற்றும் சாம்ஸ் பாரூக் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சரின் மகன் தலையீடு
கைப்பற்றப்பட்ட தங்கத்தை விடுவிக்க இராஜாங்க அமைச்சரின் மகன் தலையிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்